சென்னையில் 15வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96க்கும், டீசல் ரூ.93.26க்கும் விற்பனையாகி வருகிறது

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றியமைத்து நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96க்கும், டீசல் விலை ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் இன்று 15வது நாளாக விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




