சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனை செய்யப்பட்டது. 102 என்கிற உச்ச விலையை நோக்கி பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்தும் பெட்ரோல் சதமடித்துள்ளது தனது விலையில்.
பெட்ரோல் நேற்று 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.