வாடிக்கையாளர்களுக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பல்வேறு சேவைகளை எளிமையாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது போன்ற குறிப்பிட்ட சிறப்பு அம்சங்களால் எஸ்பிஐக்கு பிறகு அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பொதுத்துறை வங்கியாக இந்திய ஓவர்சீஸ் வங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த வங்கியில் கடன்களுக்கான வட்டிக் குறைக்கப்பட்டு, அந்த நடவடிக்கை கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்,
டெபாசிட்களுக்கான வட்டி மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஐஓபி வங்கியில் கணக்கை தொடங்கியவுடன், நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது. மாறாக, ஐஓபி வங்கியின் இணையதள வங்கி சேவையின் பயன்களைப் பயன்படுத்த வாடிக்கையாளர் முதலில் ஐஓபி இணையதள வங்கி சேவையில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
அதன்படி, www.iobnet.co.in. என்ற இணையதள முகவரியில் சென்று, தனிநபர் அல்லது proprietary firm ஆக இருந்தால் தனிநபர் பதிவு (Register Individual) என்பதை கொடுக்கவும். அல்லது பெருநிறுவன பதிவு (Register Corporate) என்பதை கொடுத்து பயன்படுத்தலாம்




