முன்னாள் WWF வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான ட்வயனே ஜான்சன் குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் தனது நீண்ட கரங்களை விரித்து கொண்டு தான் இருக்கிறது, பல தலைவர்களும் , பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் , விளையாட்டு வீரர்களும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமும் ஒரு பிரபலத்தின் பெயர் இதில் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் மூலம் பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிரபலங்களே இந்த தொற்றினால் பாதிக்க படும் போது சற்று கலக்கமாகவே இருக்கிறது.
கடந்த மாதத்தில் இந்திய உலகின் மிகப்பெரிய நட்சத்திர குடும்பமான அமிதாப்பச்சனின் குடும்பம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. இதே போன்று பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வயனே ஜான்சனின் குடும்பமும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் டுவைன் ஜான்சனுக்கும் அவரது மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா வைரஸானது எந்த பாகுபாடுமின்றி அனைத்து தர மக்களையும் பாதித்து வருகிறது. எனவே நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்.