பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக அதிக ஓட்டு எண்ணிக்கையில் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ஆரி.
பிக்பாஸ் சீசன் 4 உடைய இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் ஆரி டைட்டில் வின்னர் என தெரிந்து விட்டது. மக்களின் ஆதரவும் அவருக்குதான் அதிக அளவில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆரிக்கு வந்துள்ள ஓட்டுகளின் எண்ணிக்கை குறித்தான விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, 23 கோடிக்கும் அதிகமான ஓட்டுகளோடு ஆரி முதல் இடத்தில் வந்திருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் அதாவது ரன்னர் அப்பாக வந்திருக்கும் பாலாவுக்கும் ரியோவுக்கும் 4 கோடிக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்திருக்கிறது.
READ MORE- டைட்டில் வின்னர் ஆரி…ரன்னர் அப் பாலா! #BiggbossLiveUpdates
அடுத்து ரம்யாவுக்கு 3.7 கோடி ஓட்டுகளும் சோமுக்கு அதற்கும் குறைவான ஓட்டுகளும் கிடைத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். இன்று மாலை என்ன மாதிரியான சுவாரஸ்யமான விஷயங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.