தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷின் 40வது படமாக ‘ஜகமே தந்திரம்’ வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கடந்த வருடம் சம்மர் ரிலீஸ்ஸாக பட வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக பட ரிலீஸ் தள்ளி போனது.
இதற்கிடையில் படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், படக்குழு இதனை மறுத்து தியேட்டரில்தான் வெளியாகும் என தெளிவுப்படுத்தியது.
இதனையடுத்து போன வருடத்தில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா சூழலா தள்ளி போய் தற்போது பொங்கல் வெளியீடாக இன்னும் சில நாட்களில் தியேட்டரில் வெளியாகவுள்ளது. மேலும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படமும் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
READ MORE- சுவாமி தரிசனத்தில் ‘மாஸ்டர்’ படக்குழுவினர்!
இந்த நிலையில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படமும் பிப்ரவரி மாதம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.




