‘மாஸ்டர்’ விஜய்யுடன் ‘தங்கம்’ காளிதாஸ் சந்தித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து இயக்கிய ஆந்தாலஜி படமான ‘பாவக்கதைகள்’ முன்னணி ஓடிடி தளத்தில் வெளியானது.
இதில் சுதா கொங்கராவின் ‘தங்கம்’ படமும், இதில் காளிதாஸின் நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் காளிதாஸ் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். ‘மாஸ்டர்’ கெட்டப்பில் விஜய் இருக்க அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
READ MORE- தனுஷூடன் சிம்புவுக்கு மீண்டும் மோதல்?
மேலும் ‘மாஸ்டர்’ மீட்ஸ் ஸ்டூடண்ட் என்ற கேப்ஷனுடன் காளிதாஸ் இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்க ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.