சிம்பு கெளதம் கார்த்திக்குடன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாநாடு’, ‘ஈஸ்வரன்’ என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. இந்த நிலையில் கடந்த 2017ல் கனடாவில் சிவ்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘மஃப்டி’.
இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் கைப்பற்ற இதில் சிம்புவும் கெளதம் கார்த்திக்கும் நடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. படம் ஆரம்பித்து சில பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இடையில் லாக்டவுண் வர தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவது குறித்த அப்டேட் வந்துள்ளது. அந்த வகையில் படத்தை இயக்க ஒபந்தமான நார்த்தன் விலகி ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா உள்ளே வந்துள்ளார்.
படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. ‘பத்துதல’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் ஷூட் அடுத்த வருடம் மார்ச்சில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. விரைவில் மற்ற விவரங்கள் குறித்தான அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பார்க்கலாம்.