நடிகர் சிம்பு தன் ரசிகர்களுக்கு ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் தியேட்டரில் பார்க்க வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொரோனா காலத்திற்கு பிறகு தியேட்டர்கள் 50% பார்வையாளர்களோடு இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் ‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ படங்களுக்கு 100% அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிம்பு தன் ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘’ஈஸ்வரன்’ படம் குறுகிய காலத்தில் முடித்து வெளியிட முக்கிய காரணம் தியேட்டர்களின் மீட்சிக்காகதான். அதனால்தான் ரிஸ்க் எடுத்து படத்தை முடித்தோம்.
READ MORE- பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய்சேதுபதி!
அதேபோல, அண்ணன் விஜய் நினைத்திருந்தால் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம். அவர் தான் வளர்ந்த மீடியத்திற்கு மரியாதை செய்ய அதை செய்யவில்லை.
நானும் அதில் பங்கு கொள்ள நினைத்தேன். நிச்சயம் ‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ திரையரங்குகளின் எழுச்சிக்கு வாசலாக இருக்கும். எனவே, அரசு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்துள்ளார்.




