‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் லைவ் காட்சிகள்!

நடிகர் சிம்பு கரியரில் கம்பேக் கொடுக்கும் படமாக இயக்குநர் சுசீந்திரனின் ‘ஈஸ்வரன்’ அமைந்திருக்கிறது. தமன் இசையமைத்திருக்கிறார். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு எடுக்கப்பட்ட இந்த படம் கிராமத்து கதையை மையமாக கொண்டிருக்கிறது.
ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் பொங்கல் வெளியீடு என்பதை ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான போதே அறிவித்து விட்டார்கள். படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகி இருக்கிறது.
READ MORE- ‘ஆயிரத்தில் ஒருவன்2’ தனுஷின் மாஸ் அப்டேட்!
‘தமிழன் பாட்டு’ என தொடங்கும் இந்த பாடல் கிராமத்து திருவிழாவுக்கான கொண்டாட்டத்தோடு அமைந்திருக்கிறது. ‘சிலம்பாட்டம்’, ‘ஒஸ்தி’ படங்களுக்கு பிறகு தமன் சிம்புவுடைய இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சிலம்பாட்டம்’ படத்தில் வரும் ‘தமிழன்னா நான் ஒரு தமிழண்டா’ பாடல் ஸ்டைலிலேயே இந்த ‘தமிழன் பாட்டும்’ அமைந்திருக்கிறது. யுகபாரதி வரிகளுக்கு அனந்து பாடியிருக்கிறார்.
இந்த பாடல் சிம்புவின் ஓப்பனிங் பாடலாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் இதனை நடத்தி வருகிறார்கள்.




