மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாக இருந்தது. இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார். இதனால் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதுபோன்ற மிரட்டல்களை விடுப்போருக்கு கோலிவுட் நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.