நடிகர் விஷாலுக்கு அனிஷாவுக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் ரத்து என சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது. அது குறித்து தற்போது விஷால் தரப்பு தெளிவுப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் நடிகர் விஷாலுக்கும் அனிஷாவுக்கும் ஹைதராபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அனிஷா.
இருவருக்கும் நட்பு உருவாகி காதல் மலர்ந்த நிலையில், நிச்சயமும் நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே விஷாலுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்களை அனிஷா நீக்க, இருவருக்கும் திருமணம் ரத்து என தகவல் பரவ தொடங்கியது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமா விஷால் தரப்போ, அனிஷா தரப்போ விளக்கம் கொடுக்காமல் இருந்தது. அதற்கு பிறகு தற்போது அனிஷாவிற்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் வரும் ஜனவரியில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
READ ALSO- ‘வலிமை’ அப்டேட் குறித்து மனம் திறந்த அஜித் தரப்பு!
இது குறித்து விஷால் தரப்பு, ‘திருமணம் ரத்தானது உண்மைதான்’ என தெளிவுப்படுத்தியுள்ளார்கள். அனிஷா திருமணம் குறித்து கேட்ட போது அது பற்றி தெரியாது என விளக்கமளிக்க மறுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.




