தமிழ் திரையுலகில் மைனா, தலைவா, தெய்வத்திருமகள் போன்ற படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் அமலா பால். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த அமலாபால், தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நிர்வாணமாக நடித்த காரணத்தால் பல படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சோசியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வரும் அமலா பால் புகைபிடிப்பது, சரக்கடிப்பது, ஆண் நண்பர்களுடன் கடற்கரையில் குளிப்பது, கவர்ச்சி ஆடையில் போட்டோ ஷூட் நடத்துவது என வேற லெவலுக்கு விவகாரங்களை செய்து வருகிறார்.
முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சோசியல் மீடியா மூலமாக திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸை வெளியிட்டிருக்கிறார். அதாவது 12 ஆண்டுகளாக நடிகையாக இருந்து வந்த அமலா பால், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அமலா பாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.




