பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்த்து நடிகை ஓவியா டுவீட் செய்துள்ளார்.

சென்னை :
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திரமோடி நாளை ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி,. அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.
சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சிலர் டுவீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




