தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தான் நன்றி கடன்பட்டுள்ளதாக, எழுதிய குறிப்பு ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள தான் வசித்து வந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சிபிஐ தன் வசம் எடுத்து உள்ளது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கில் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரியாவிடம் ஏற்கனவே 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், நாளை மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ரியா, இறந்தசுஷாந்த் கைப்பட எழுதியது என கூறி டைரியின் பக்கம் ஒன்றை அவரது வக்கீல் மூலமாக சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நன்றிகடன் பட்டவர்கள் எனும் தலைப்பில் உள்ள அந்த பக்கத்தில், “நான் என் வாழ்க்கைக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். எனது வாழ்வில் லில்லுவுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் பெபுவுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் சாருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். என் வாழ்வில் மேடமுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் புட்ஜிக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி, பெபு என இருப்பது ரியா எனவும், லில்லு ரியாவின் சகோதர் சோவிக் எனவும், சார் என்பது ரியாவின் தந்தை எனவும், மேடம் அவரின் தாய் எனவும், புட்ஜ் நாய் குட்டி எனவும் ரியா தெரிவித்து உள்ளார். மேலும் தண்ணீர் பாட்டில் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரியா இதுதான் தன்னிடம் உள்ள சுஷாந்த் சிங்கின் சொத்து எனவும் தெரிவித்து உள்ளார்.