கோலிவுட்டில் ஆரம்பித்து டோலிவுட்டுக்கு சென்று பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கியவர் இயக்குனர் முருகதாஸ் ஏறக்குறைய இந்தியாவில் அனைத்து முன்னணி நடிகர்களை இயக்கிய பெருமை இவருக்கு உள்ளது.
பல முன்னணி நடிகர்களை மெகாஹிட் கொடுத்த இயக்குனர் என்றால் அது முருகதாஸ்தான் ஒரு காலத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்த நடிகர்கள் தற்போது அவரை மொத்தமாக ஒதுக்கியது திரையுலகில் பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.
தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் தல அஜித், தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்து அவர்களின் மார்க்கெட் உயர காரணமாய் இருந்தவரும் நமது முருகதாஸ் தான்.
அதில் குறிப்பாக சூர்யாவுக்கு கஜினி, அதே படத்தை அமீர் கானை வைத்து இந்தியில் எடுத்து பெரும் வெற்றி பெற்றார். அடுத்ததாக தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருப்பதற்கு பெரிதும் உறுதுணையாக அமைந்தார்.
இந்நிலையில் முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்க இருந்த நிலையில் திடீரென தளபதி விஜய்க்கு முருகதாஸ் கதை பிடிக்காததால் ஒதுங்கிவிட்டார் என தகவல்கள் கிடைத்துள்ளது.
அதன் பிறகு பல முன்னணி நடிகர்களை கேட்டும் முருகதாசுக்கு பட வாய்ப்பு தர யோசிக்கிறார்களாம். கடைசியாக அவர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய தர்பார் படம் பெரும் தோல்வியை பெற்றதே அதற்கு முக்கிய காரணம் என சொல்ல படுகிறது .
இதனால் சில மாதங்களில் சிறப்பான கதையை தயார் செய்துவிட்டு விரைவில் முன்னணி நடிகரின் பட அறிவிப்புடன் வருவார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.