விஜய் சேதுபதிக்கு பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஆதரவளித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதுதான் இந்த வாரத்தின் பேசுபொருளாகி உள்ளது.
முத்தையா முரளிதரன் வரலாற்றின் எச்சம் அவர் துரோகி என்று கவிஞர் தாமரைவிஜய் சேதுபதிக்குக் கடிதம் எழுதினார்.
முரளிதரனிம்ன் 800 என்ற படத்தில் நடிக்ககூடாது என பாரதிராஜா , சீமான், வைகோ, வைரமுத்து, உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுறை கூறினார்.
இந்தப் படத்தில் அரசியல் கிடையாது என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்த நிலையில் இதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
விஜய் சேதுபதி முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை ; அதில் அரசியல் கலப்பது சரியல்ல என்று பாஜக மாநிலத் துணத்தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.




