தர்பார் திரைப்படத்தின் அட்டகாச வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
லேடி சூப்பட்ஸ்டார் நயன்தாரா சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்து வருகின்றனர். மேலும் சித்தார்த், லிவிங்ஸ்டன், மீனா, குஷ்பூ, பாண்டியராஜன் என திரைப்பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் 2020 தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பிற்கு ஏகப்பட்ட தடங்கல்கள் உருவான நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10ம் தேதி காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.