அந்நியன்’ ரீமேக் விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் இவரின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. பிரம்மாண்டமான படைப்புகளுக்கு சொந்தமானவர். ஆனால் சமீப காலமாக இவருக்கு பல சிக்கல்கள் ஏற்ப்பட்டு வருகிறது.
இவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆந்நியன். இந்த படமானது அனைவரின் மனதையும் கொள்ளையடித்தது. வசூலில் சாதனை படைத்து பிரம்மாண்டமான வெற்றி பெற்றது.
இந்த படம் வெளியாகி பத்து வருடங்கள் மேலாகிவிட்டது. தற்போது சங்கர் அவர்கள் இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார்.
இச்செய்தியானது வெளியாகிய உடனே அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் சங்கர் மீது வழக்கு தொடுத்தார். எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்மவிருப்பதை கண்டித்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் ‘அந்நியன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே படத்தின் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன் தான் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஷங்கர் மீது ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். ’அந்நியன்’ படத்தின் காப்பிரைட் தன்னிடம் இருக்கும் போது அதனை தனக்கு தெரியாமல் ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளை ஷங்கர் செய்து வருவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு தற்போது நேரம் சரியில்லை போலும். ஏற்கனவே இந்தியன் 2 ஆரம்பத்து முடியாமல் இருக்கும் நிலையில் இப்போது அந்நியன் ரீமேக்கும் சேர்ந்துவிட்டது




