ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் என அழைக்கப்படும் ஏ.வி.மெய்யப்பன் நினைவு நாள் ஆகஸ்ட் 12ஆம் தேதி (1979).
இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், சமூகத் தொண்டாற்றியவருமான ஏ.வி.மெய்யப்பன், வடபழனியில் உள்ள ஏவிஎம் ப்ரொடக்சன்ஸ் என்ற புகழ்பெற்ற நிறுவனத்தை நிறுவியர் ஆவார். ஏ.வி.மெய்யப்பன் தனது வாழ்நாளில் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார்.
தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற 2 பேர் எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத்).
தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏ.வி.எம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல் தனது ட்விட்டர் பதிவில்
“என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை ஏ.வி.மெய்யப்பனின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார் .