தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கி பெயரை மாற்றிக் கொண்டு பிக் பாஸ் வந்த அக்ஷரா ரெட்டி!!
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக 17 பேரில் ஒருவராக உள்ளேயிருக்கும் மாடலிங் நடிகையான அக்ஷரா பற்றி பல பகீர் செய்திகள் வெளியில் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ‘மிஸ் தென்னிந்திய அழகி’ என்ற பட்டத்தை 2013-ம் ஆண்டு வென்ற கதையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொன்ன அக்ஷரா ரெட்டி சொல்லாமல் மறைத்த கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா என்ற பெண் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. விசாரித்தது. அப்போது இதுதொடர்பான தொடர் விசாரணையில் சிக்கியவர் மாடல் அழகி ஸ்ராவ்யா சுதாகர். இவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். அந்த ஸ்ராவ்யா சுதாகர்தான் இப்போது அக்ஷரா ரெட்டி என பெயர் மாற்றிக் கொண்டு பிக்பாஸிற்குள் வந்திருக்கிறார். அக்ஷரா சென்னையில் பிறந்தவர். ஜார்ஜியா நாட்டில் உள்ள டிபிலிஸ் பல்கலைக் கழகத்தில் சைக்காலஜி பாடப் பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்.
2019ஆம் ஆண்டில் சர்வதேச பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக போட்டியிட்டவர். இவருடைய இயற்பெயர் அக்ஷரா சுதாகர் ரெட்டி. ஷர்வ்யா என்பது இவரது புனைப் பெயராம். மாடல் அழகியான ஸ்ராவ்யா ரெட்டி சில குற்ற வழக்குகளில் போலீஸ் மற்றும் சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டு பெயர் டேமேஜ் ஆன நிலையில், தனது பெயரை ‘ஷ்ராவ்யா’வில் இருந்து ‘அக்ஷரா ரெட்டி’ என மாற்றி வைத்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கி கைதான டி.கே. ஃபைஸ் என்பவருடன் இந்த அக்ஷராரெட்டி மிக நெருக்கமாக இருந்தது சிபிஐயால் கண்டறியப்பட்டது. அதனால் தான் அவர் சிபிஐ- ஆல் விசாரிக்கப்பட்டார். அப்போது தனக்கும் அந்த கடத்தல் வழக்கிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. டி.கே.ஃபைஸை தனக்கு நடிகை மைதிலிதான் அறிமுகப்படுத்தி வைத்தார் என்று சிபிஐ அதிகாரிகளிடம்தெரிவித்திருந்தார் அக்ஷரா ரெட்டி.
அக்ஷரா, சிபிஐ விசாரணையில் ஃபைஸுடன் கடந்த 7 மாதங்களாகத் தொடர்பில் இருந்ததாகவும், இருவரும் ஐந்து முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதையும் ஒத்துக் கொண்டார். ஆனாலும் தங்கக் கடத்தல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஃபைஸ் அது பற்றி தன்னிடம் எதையும் சொன்னதில்லை என்றும் தெரிவித்தார். இந்தத் தங்கக் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தச் சம்பந்தமும் இ்ல்லை என்று அக்ஷரா சொன்னதை சிபிஐ ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பித்தார் அக்ஷரா.
2018-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ நிகழ்ச்சியில் ‘ஸ்ராவ்யா சுதாகர்’ என்னும் பெயரில் பங்கேற்ற அவர் தற்போது ‘அக்ஷரா ரெட்டி’ என்ற பெயரில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.