பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்க இந்த வாரம் பலரும் ஷிவானியின் பெயரை சொல்லியிருக்கிறார்கள்.
அர்ச்சனா வெளியேற்றத்திற்கு பிறகு ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்று நாமினேஷன் தொடங்கியிருக்கிறது.
இதில் சோம் ஷிவானி மற்றும் ஆஜீத்தை நாமினேட் செய்திருக்கிறார். இதற்கான காரணமாக அவர் சொல்வது ஷிவானி இதுவரை பாலாவை நம்பி மட்டுமே கேம் விளையாடியிருக்கிறார் என்பதுதான். பாலா சோம்மை நாமினேட் செய்கிறார்.
அனிதா, ஆஜீத், கேபி, ஆரி இவர்கள் அனைவரும் ஷிவானியை நாமினேட் செய்கிறார்கள். இதுவரைக்கும் ஷிவானி வீட்டுக்குள்ள என்ன பண்ணினாங்கன்னே தெரியல என்பதுதான் இவர்கள் முன்வைக்கும் காரணம். ரம்யா, ஷிவானி, ரியோ இவர்கள் ஆரியை நாமினேட் செய்கிறார்கள். இதற்கான காரணம் ஆரி ஹவுஸ்மேட்ஸ் யாருடனும் ஒத்து போகவில்லை என்பதுதான்.
ஆஜீத்தும் கேபியும் அனிதாவை நாமினேட் செய்கிறார்கள். ரம்யா மற்றும் ஆரி கேபியை நாமினேட் செய்கிறார்கள். ஆரி, ஆஜீத், ஷிவானி மற்றும் அனிதா இவர்கள் இந்த வார நாமினேஷனில் வந்திருக்கிறார்கள்.