பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் பாலாவுக்கும் கேபிக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் பால் கேட்ச் டாஸ்க்கின் நான்காவது பகுதி இன்று தொடர்கிறது.
இதில் பைப் வழியே கோல்டன் கலர் பால் வரும். இதை போட்டியாளர்கள் தனித்தனியாக பிடிக்க வேண்டும். யார் சரியாக பிடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் வழங்கப்படும். அதன்படி, பந்தை சரியாக பிடித்தவர்களுக்கு ஒரு போர்டில் நிறைய அட்டைகள் வைக்கப்பட்டிருக்கும்.
READ MORE- சமந்தாவின் நியூ ட்ரெண்டிங் லுக்!
அதிலிருந்து கொடுக்கப்பட்ட ஆப்ஷனை தேர்ந்தெடுப்பவர்கள். அதை செயல்படுத்த வேண்டும். இதில் பாலா, ரம்யா, ஆரி, கேபி அனைவரும் பந்தை சரியாக பிடிக்கிறார்கள். இதில் முதலில் பாலா ஒரு அட்டையை எடுக்கிறார். அதில் அவருக்கு இப்பொழுது இருக்கும் மதிப்பெண்களை விட 100 மதிப்பெண்கள் அதிகரிக்கப்படுகிறது.
அடுத்து வரும் ரம்யா, யாராவது ஒருவரின் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ரியோவின் மதிப்பெண்களை பூஜ்ஜியமாக்குகிறார். அடுத்து வரும் கேபியும் இதே ஆப்ஷனை தேர்ந்தெடுத்து பாலாவின் மதிப்பெண்களை பூஜ்ஜியமாக்குகிறார்.
இதை பார்த்ததும் ரியோ கேபியை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பாலா அப்செட். ‘அடுத்த ஜீரோ நீதான்’ என கோபமாக சொல்லி கொண்டே உள்ளே செல்கிறார் பாலா.