பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றும் பால் கேட்ச் டாஸ்க்கில் சிறப்பாக பர்ஃபாம் செய்து ரியோ அதிக மதிப்பெண்களுடன் அடுத்த வாரம் கேப்டன் நாமினேஷனுக்கு தேர்வாகி இருக்கிறார்.
இவரை தவிர பெஸ்ட் பர்ஃபாமரில் ஆரி மற்றும் சோம் தேர்வாகியிருக்கிறார்கள். இப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டி இருக்கிறது.
போட்டியாளர்களுக்கு கேக், பரிசு, பிரியாணி என அனுப்பி வைத்து அவர்களுக்கு வாழ்த்துகளையும் சொல்லியிருக்கிறார் பிக்பாஸ்.
இதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் டாஸ்க்காக இரு அணிகளாக பிரிந்து கேக் செய்ய வேண்டும் என்ற டாஸ்க்கையும் கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். இன்று எபிசோட் முழுக்க ஃபன் டாஸ்க்காக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.