பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க் இருக்கிறது என தகவல் வந்தது.
அதன்படி இன்று முதல் புரோமோவில் ஹைலைட் ஆகியிருக்கு. ஷிவானியிடம் பிக்பாஸ் ஃப்ரீஸ் ஆகுங்க என்று சொல்ல ஷிவானி அங்கயே கண்கலங்க ஆரம்பித்து விடுகிறார். அங்கு செல்லும் பாலா, ‘என்ன ஷிவானி?’ என சிரித்து கொண்டே போகிறார்.
எதிர்ப்பார்த்தது போலவே ஷிவானியின் அம்மா எண்ட்ரி கொடுக்கிறார். அம்மாவை பார்த்ததும் கண்கலங்கி ஓடி வந்து கட்டிப்பிடித்து ஷிவானி அழ அவரது அம்மாவும் எமோஷனல் ஆகிறார். இதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் நெகிழ்ச்சியாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஷிவானியும் அவரது அம்மாவும் தனியாக பேசி கொண்டிருக்கிறார்கள்.
READ MORE- ஆரியின் ஸ்லீப்பர் செல் ரம்யா! #BiggbossPromo2
அவரது அம்மா, ‘எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த? உள்ள நீ பண்ணிட்டு இருக்கறது வெளிய யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா?’ என கேட்க ஷிவானியின் முகம் மாறுகிறது.
கடந்த சீசனில் லாஸ்லியா-கவின் விஷயத்தில் ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க்கில் லாஸ்லியா மேல் அவரது பெற்றோர்கள் அப்செட் ஆனது போல இந்த புரோமோவிலும் ஹைலைட் ஆகியிருக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.