பிக்பாஸ்ஸில் இந்த வாரம் நடந்த பல பஞ்சாயத்துகளை குறித்து போட்டியாளர்களை கமல்ஹாசன் கண்டிக்கும் விஷயம் முதல் புரோமோவில் ஹைலைட் ஆகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.
இதில் இந்த வாரம் நடந்த கால் செண்டர் டாஸ்க்கின் சொதப்பல்கள், ரேங்க்கிங்கில் நடந்த குளறுபடிகள், சனம் பாலா சண்டை, கேப்டன்சி டாஸ்க்கில் ஆரியின் மீது வைத்த மாத்தி மாத்தி பேசற குற்றச்சாட்டு போன்றவை ஹைலைட் ஆகியிருக்கிறது.
‘இவங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிய மாட்டிங்குது. என்ன செய்யலாம்?’ என கமல் புரோமோவில் கேட்பதோடு முடிகிறது. கடந்த சீசன்களில் போட்டியாளர்களை குறைகளை எடுத்து சொல்வதில் கமல்ஹாசனுக்கு இருந்த கண்டிப்பு இந்த சீசனில் இல்லை என்றே பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த வாரம் அந்த குறையை போக்கும்படி கடுமையாக்குவாரா அல்லது வழக்கம் போல டிப் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




