முதல் முறையாக பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் இந்த முறை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் முதல் முறையாக போட்டியாளர்கள் அனைவரும் தலைவர் பதிவிக்கு போட்டியிடுகிறார்கள்.
தலைவர் பதவிக்கான டாஸ்க் என்ன என்றால், போட்டியாளர்கள் இரண்டு பேருக்கு பிக்பாஸ் டிவியில் படங்கள் போட்டு காண்பிக்கப்படும். இதில் 10 செகண்ட்ஸ்க்குள் அந்த படங்கள் தொடர்பாக பிக்பாஸ் கேட்கும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் சொல்ல வேண்டும்.
இதில் புரோமோவில் முதலில் அர்ச்சனா சோம், அடுத்து பாலா ஷிவானி, அதற்கடுத்து மீண்டும் அர்ச்சனா நிஷா இறுதியாக நிஷா மற்றும் அனிதா நிற்கிறார்கள்.
இதில் பிக்பாஸ் கேள்விக்கு அனிதா சரியான பதிலை சொல்லி இந்த வார கேப்டனாக தேர்வாகியிருக்கிறார். இரண்டு வாரமாக அனிதா வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அனிதா தலைவராகி இருக்கிறார். இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தி கொள்கிறார் என பார்ப்போம்.