பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் டாஸ்க்கில் சரியாக செயல்படாதவர்களை தேர்வு செய்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் புதிய மனிதா டாஸ்க்கில் சரியாக செயல்படாத ஹவுஸ் மேட்ஸ்களை மற்றவர்கள் நாமினேட் செய்து ஓய்வெடுக்கும் அறைக்கும் அனுப்புவது ஹைலைட் ஆகியிருக்கிறது.
இதில் ரியோ, ‘ஆரியுடைய கேம் மெத்தோடு இண்ட்ரஸ்ட்டா இல்ல’ என சொல, அடுத்து சுவாரஸ்யம் இல்லை என சோமும் ஆரியை நாமினேட் செய்கிறார்.
அடுத்து வரும் ரமேஷ், ஆஜீத், அர்ச்சனா இவர்களும் அனிதாவை ரோபோவாக சுவாரஸ்யம் குறைவாக இருந்தது என நாமினேட் செய்கிறார்கள்.
கடந்த சில எபிசோட்டிலேயே அர்ச்சனா கேங் அனிதா மற்றும் ஆரி எந்த க்ரூப்பிலும் சேராமல் இருப்பதால் அவர்களை நாமினேட் செய்ய வாய்ப்புண்டு என அவர்கள் பேசி கொண்டிருந்தார்கள். அதற்கேற்றார் போல இப்போது அவர்கள் நாமினேட் செய்கிறார்கள்.