பிக்பாஸ்ஸின் இரண்டாவது புரோமோவில் ஆரி மற்றும் பாலா ஒன்று சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ்ஸின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் முந்தைய புரோமோவின் டாஸ்க் குறித்து பாலா மற்றும் ஆரி பேசி கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் இவர்கள் ஒரே அணி. இதில் டாஸ்க்கின் போது பாலா மற்றும் சோம் பைப்பின் முன் நின்று பந்தினை பிடிக்க தயாராக இருக்க அப்போது சோம், ‘என்னை தள்ளி விடாதே’ என பாலாவிடம் சொல்கிறார். ஆனால், அதற்கேற்றாற் போலா பந்து சோம் கையில் வரும் போது பாலா தள்ளி விடுவது போலதான் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
READ MORE- ஆரியை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்! #BiggbossPromo1
‘என் லைன்க்குள்ள வந்து நின்னுட்டு என்னைய தள்ளி விடாதேன்னு சொன்னா நான் எப்படி விளையாட?’ என கேட்கிறார். இது குறித்துதான் ஆரியும் பாலாவும் பேசி கொண்டிருக்கிறார்கள். ‘நீங்க நல்லா விளையாடறீங்க. நீங்களே முன்னாடி போய் விளையாடுங்க. நான் வந்தாதான் அது இது இடிக்குதுன்னு சொல்லுவாங்க. எதுக்கு விளையாடணும்னு இருக்கு’ என வெறுத்து போய் சொல்கிறார்.
அதே போல ஆரியும், ‘நானும் ரியோவும் விளையாடும் போது, ‘முன்னாடி போ முன்னாடி போ’ன்னு ரியோட்ட கத்திட்டே இருக்காங்க. இது பேசி வச்சுட்டு விளையாடினதா இல்ல என்னைய கவனம் சிதற விடறதுக்கான்னு தெரியல’ என சொல்ல புரோமோ அங்கு முடிகிறது.