பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் அனிதா பாலாவை கடுப்பேற்றியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் பால் கேட்ச் டாஸ்க் மற்றும் இந்த வாரம் முழுவதும் நன்றாக பர்ஃபாம் செய்தவர்கள் மற்றும் வொர்ஸ்ட் என தேர்ந்தெடுப்பது ஹைலைட் ஆகியிருக்கிறது.
READ MORE- சிம்புவின் ‘மஃப்டி’ ரீமேக். டைட்டில் என்ன தெரியுமா?
இதில் அனிதா பாலாவை நாமினேட் செய்கிறார். இதற்கான காரணமாக அவர் சொல்வது ‘பாலா சில இடங்களில் கேப்டனாக ஃபெயில் ஆகிவிட்டார். கேபி, சோம் தூங்கும் போது ஆமாம் அவர் தூங்கி விட்டார் என சொன்ன பாலா, ஷிவானி தூங்கும் போது மட்டும் எதுவும் சொல்லவில்லை’ என சொல்ல, ஷிவானி அந்த பக்கம் அப்செட்.
பாலா, அப்படி எல்லாம் இல்லை என சொல்ல அதற்கு அனிதா, ‘நான் பேசும் போது இடையில பேசாதீங்க. நான்தான் இங்க நாமினேட் பண்றேன். நான் என்ன ஃபீல் பண்ணறேனோ அததான் சொல்ல முடியும். நான் பொய்லாம் சொல்லல’ என ஹைப்பர் ஆகி கத்தி கொண்டிருக்க புரோமோ அதோடு முடிகிறது.




