பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ஆரியை பற்றி ரியோவும் ரம்யாவும் பாராட்டியிருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் டிக்கெட் டூ ஃபினாலேவின் அடுத்த டாஸ்க் நடந்திருக்கிறது.
இதில் பிக்பாஸ் ஒரு அட்டையில் வாக்கியத்தை கொடுத்திருப்பார். அதில் ஹவுஸ்மேட்ஸ் யாருக்கு சரியாக பொருந்துருகிறது என்பதை சொல்ல வேண்டும்.
READ MORE- பொங்கலுக்கு வெளியாகும் ‘சூரரைப்போற்று’?
இதில் கேபி, ஷிவானி என எல்லாரும் எடுத்து வைக்க, ஆரியின் முறை வருகிறது. இதில் அவருக்கு ‘காலத்தை அறிக’ என்ற வசனம் வந்திருக்க, ‘இதற்கான விளக்கம் நான் சொல்ல தேவையில்லை. ஏன்னா, காலம் அறிகன்னு சொல்லியிருக்கறதால நேரத்தை வீணடிக்கல’ என சொல்ல ரம்யா, ரியோ என அனைவரும் சிரிக்க இவர்கள் இருவரும் ‘இப்பதான் ஆரி ப்ரோ கரெக்ட்டா கலகலப்பா பேசியிருக்காரு’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.




