தற்போது வெளியாகியிருக்கும் பிக்பாஸ் இரண்டாவது புரோமோவில் கால்செண்டர் டாஸ்க்கில் ரேங்கிக்கிங் அடிப்படையில் போட்டியாளர்களுக்குள் விவாதம் போய் கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதிலும் கால்செண்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ரேங்க்கிங்கில் அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும்.
இதில் தனக்குதான் முதல் இடம் வேண்டும் என அர்ச்சனா வாதிடுகிறார். இதற்கான காரணமாக அவர் முன்வைப்பது, டாஸ்க்கில் மணி அடிக்கும் வரை விடாமல் பேசியதற்கும், கண்டெண்ட்டும் நன்றாக கொடுத்ததையும் அவர் சொல்கிறார். இன்னொரு பக்கம் சனம் முதல் இடத்தில் நிற்கிறார்.
எனக்கு யாருமே கால் பண்ணி பேசல, அவ்வளவு பயம் என சொல்ல அதற்கு பாலாவும் ரமேஷ்ஷூம் சனமை கிண்டல் செய்கிறார்கள். ஏனெனில் கால் செண்டர் டாஸ்க்கில் சனம் சம்யுக்தாவுக்கு மட்டுமே கால் செய்து பேசினார். சனம் ஊழியராக இருந்தபோது அவருக்கும் கால் வரவில்லை.
எனவே, அவரை கடைசி இடத்துக்கு பாலா பரிந்துரைக்கிறார். அதற்கான காரணமாக அவர் முன்வைப்பது, ‘பண்ணினது ஒரே ஒரு கால், அதுலயும் ஃபெயில். மத்தவங்க நாமினேட் ஆக கூடாதுன்னு சொல்றதும், தன்னைத்தானே நாமினேட் பண்ணிக்கறதும் ஒன்னா’ என கேட்கிறார் பாலா.




