பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் அர்ச்சனா கேங் நிஷாவை பற்றியும் அவரது கேம் ப்ளான் குறித்தும் பேசி கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் அர்ச்சனா, சோம், ரியோ, ரமேஷ் இவர்கள் நிஷா குறித்து பேசி கொண்டிருக்கிறார்கள்.
READ ALSO- ’சனம்க்கு ஃபேவரிஸம் காட்டியிருக்கீங்க’- ஆரியிடம் சண்டையிட்ட அனிதா! #BiggbossPromo1
இதில் ரமேஷ், ‘நிஷா வீக் அப்படின்னு சொல்லிட்டு தன்னை தானே சொல்லிக்கறா’ ‘எல்லாரும் பண்றப்போ அமைதியா கைத்தட்டி சிரிச்சுட்டு இருக்கீல்ல, எப்போ நீ பேசுவன்னு திட்டி விட்டதும்தான் புத்தி வந்துருக்கு. காமெடி பண்ணினா என்ஜாய் பண்ணுங்க. அதை விட்டுட்டு நல்லால்லன்னு ப்ராண்ட் பண்றது அவங்களுடைய கரியரை பாதிக்கும்’ என அர்ச்சனா சொல்கிறார்.
‘ஒருமுறை இப்படி சொன்னா ஓக்கே. பலமுறை ஒருத்தர் இப்படி வந்து சொல்றாங்கன்னா அத திரும்ப கேட்கனும். எப்போதான் அவளுக்கு புத்தி வருமோ’ என புலம்புகிறார் ரமேஷ்.