பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் நிஷாவுக்கும் அனிதாவுக்கும் இடையில் மோதல் வெடித்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் ‘புதிய மனிதா’ டாஸ்க்கில் நன்றாக பர்ஃபார்ம் செய்யாதவர்களை ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் பலரும் அனிதா மற்றும் ஆரியின் பெயரை சொல்ல, இந்த புரோமோவில் அதற்கான சண்டை அனிதா மற்றும் நிஷாவுக்கு இடையில் நடந்திருக்கிறது.
READ ALSO- அனிதா மற்றும் ஆரியை கார்னர் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!#BiggbossPromo1
இதில் அனிதா, ரியோவை நாமினேட் செய்யும் போது, ‘எல்லோருக்கும் தனித்தனியாக பேர சொல்லிட்டு நான் சொல்லுவேன் அப்படின்னு சொல்லும்போதே என்னைய கோர்த்து விடற மாதிரிதான் இருந்தது’ என சொல்ல நிஷாவும் ரியோவும் கோபத்தோடு எழுகிறார்கள்.
இதில் நிஷா கோபாமா, ’நான் பப்பெட், பாஸ்ஸி எல்லாம் சொன்னேன்னா, அவன் கான்செப்ட் வேணாம்னுதான் சொன்னான்’ என சொல்ல அதற்கு அனிதா, ‘மேக்கப்ன்னு நீங்கதான சொன்னீங்க. கான்செப்ட் வேணாம்ன்னா இப்ப ஏன் சொல்றீங்க’ என கேட்க புரோமோ அத்தோடு முடிகிறது.