பிக்பாஸ்ஸின் இரண்டாவது புரோமோவில் அர்ச்சனா மற்றும் அனிதாவுக்கு இடையில் வாக்குவாதம் தொடங்கியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் முதல் புரோமோவில் ரியோவுடன் அனிதாவுக்கு சண்டை ஏற்பட இதில் அர்ச்சனா அனிதாவுடன் வாக்குவாதம் நடக்கிறது.
READ ALSO- ரியோ, அனிதாவுக்கு இடையில் முற்றிய சண்டை! #BiggbossPromo1
அர்ச்சனா அனிதாவிடம், ‘டாஸ்க் முடியறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் நான் பிரேக் ஆனேன். ஆனா, அந்த பத்து நிமிஷமும் நான் ரோபோவாதான் இருந்தேன். நான் அழுததால டாஸ்க் போரிங் அப்படின்னு சொன்னீங்கல்ல. அதுக்காக நான் சொல்றேன்’ என்கிறார் அர்ச்சனா.
அதுக்கு பிறகு, அனிதா ‘பத்து நிமிஷம்ன்னாலும் அது டாஸ்க்தான? நீங்க அழுததால நான் டாஸ்க் போரிங்ன்னு சொல்லல. நிஷாக்கா ஆரம்பிச்சதுனாலதான் அப்படியாச்சுன்னு சொல்றேன். நீங்களே கோபப்படற அளவுக்கு அப்போ நிஷாக்கா விளையாடி இருக்காங்க. இனிமேல் உங்க பேர நான் எடுக்கல. ஆனா, கேம்ன்னு வந்தா கண்டிப்பா பேசுவேன்’ என சொல்ல அர்ச்சனா அங்கிருந்து கோபமாக நகர்கிறார்.




