பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் அனிதாவிற்கும் ரியோவிற்கும் சண்டை வாக்குவாதம் ஆரம்பித்து இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் அனிதா மற்றும் ரியோவுக்கு இடையில் வாக்குவாதம் ஆரம்பித்து இருக்கிறது.
ஓப்பன் நாமினேஷனில் இருவரை நாமினேட் செய்த பிறகு ரியோ, கடந்த வாரம் அனிதா டாஸ்க்கின் போது தனியாக 12 பேருக்கு சமைத்ததை சொல்ல, அதனை சுட்டி காட்டிய ரியோ, அனிதா உதவிக்கு கூப்பிட்டு இருந்தால் அத்தனை பேரும் வந்திருப்பார்கள் என சொல்கிறார்.
READ MORE- அன்பு கேங்கை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்! #BiggbossPromo1
‘இந்த விஷயத்தை பதிவு பண்ணதான் நினைச்சேன். இந்த காரணத்தை சொல்லி அவங்களை நாமினேட் பண்ணல’ என சொல்லிவிட்டு ரியோ அங்கிருந்து நகர அனிதா அவர நிறுத்தி பேசுகிறார். ‘இதை நீங்க என்கிட்ட தனிப்பட்ட முறையிலேயே சொல்லியிருக்கலாம். இப்படி பொதுவா வந்து பேசினா நான் கேக்க மாட்டேன்னு நினைக்க வேண்டாம்’ என பேச ரியோ அங்கிருந்து நகர்கிறார்.
உடனே அனிதா, ’தைரியம் இல்லாம எங்க போறீங்க? நின்னு பேசுங்க’ என ட்ரிக்கர் செய்ய ரியோ கோபப்படுகிறார். ‘தைரியம் இல்ல அப்படிங்கற வார்த்தை எல்லாம் என்கிட்ட பேசாதீங்க. பார்த்து பேசிங்க. இங்கதான் இருக்கேன். நான் ஒன்னும் கதவ தாண்டி ஓடலயே’ என பதிலுக்கு கோபப்படுகிறார். அதற்கு அனிதா, ‘ஏன் கத்தறீங்க?’ என கேட்க அங்கு ஒரு விவாதம் ஆரம்பித்து விட புரோமோ அத்தோடு முடிகிறது.




