பிக்பாஸ்ஸில் இந்த வாரம் குறைந்த ஓட்டுகளோடு வெளியேறுவது யார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்ல் இருந்து இந்த வாரம் ஷிவானி வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ஆஜீத் வெளியேற அடுத்த வாரம் ஷிவானிதான் வெளியே போவார் என அப்போதே சோஷியல் மீடியாவில் பேச்சு அடிபட்டது.
இந்த நிலையில், தற்போது குறைந்த வாக்குகளோடு ஷிவானி வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே, யாருடனும் அதிகம் பேசாமல் பிறகு போட்டியிலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் பாலாவுடன் மட்டுமே ஷிவானி இருந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் வெளியேறுவார் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில், சுரேஷ், சனம், அனிதா, அர்ச்சனா போன்ற ஸ்ட்ராங்கான ப்ளேயர்கள் வெளியே வந்ததும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
READ MORE- ‘மாஸ்டர்’ருடன் ‘தங்கம்’ காளிதாஸ்!
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ்ஸில் இந்த வாரம் ரம்யாவும் ஷிவானியும் குறைந்த ஓட்டுகளோடு இறுதி நிலையில் இருக்க ஷிவானி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.