தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் படத்தை வெளியிட்டு தனது பாலோயர்களை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெறிக்க விட்டுள்ளார்.

பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இலங்கையைச் சேர்ந்த இவரை ரசிகர்கள் பாலிவுட்டின் ஸ்மைல் குயின் என்று கொண்டாடி வருகிறார்கள்.
அமிதாப் பச்சன், சஞ்சய் தத் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜாக்குலின், தொடர்ந்து, இம்ரான் ஹாஸ்மியின் மர்டர் 2, அக்ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2, டிஷூம், ஜூத்வா உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
பிரபாஸ் நடித்து தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அடுத்து, அட்டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏராளமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் ஜாக்குலின், தற்போது உடலின் மேல்பாகத்தை பூக்களால் மட்டுமே மறைத்து படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரது பாலோயர்களின் எண்ணிக்கை 4.6 கோடியாகும். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். இந்தப் படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.




