பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர், கொல்கத்தாவில் தனியார் கல்லூரி ஒன்றின் சேர்க்கை பட்டியலில் முதலிடம் பிடித்த சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அசுடோஷ் எனும் தனியார் கல்லூரி நேற்று (ஆக.27) தனது இணையதள பக்கத்தில் பி.ஏ ஆங்கில படிப்பின் சேர்க்கைகான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்ததை கண்டு, பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தரவரிசை பட்டியலில் 9513008704 என்ற பதிவு எண்ணிலும், 207777-6666 எனும் வரிசை எண்ணிலும் சன்னி லியோனின் பெயர் இடம் பெற்றுள்ளது, இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நடிகை சன்னிலியோன், தனது 12ம் வகுப்பு தேர்வில் நான்கு பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களால் பேசுபொருளான நிலையில், இது விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம், சன்னி லியோனின் பெயரில் யாரோ வேண்டுமென்றே தவறான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததுள்ளதாகவும், அதை சரிசெய்யுமாறு சேர்க்கை துறையிடம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் பட்டியல் குறித்து சன்னிலியோன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டர் தேர்வில் சந்திக்கிறேன், நீங்கள் எனது வகுப்பில் இருப்பீர்கள் என நம்புகிறேன்’ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.