விஜய்யின் மாஸ்டர் படத்தில் இளம் பவானியாக (விஜய் சேதுபதி நடித்த கேரக்டர்) நடித்த மாஸ்டர் மகேந்திரன், ஆர்யா நடிக்கும் முத்தையாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தனது கதாபாத்திரம் குறித்து பேசிய அவர், “இது ஒரு முக்கியமான சிறப்புத்தோற்றம். எனது காட்சி ஃப்ளாஷ்பேக் பகுதிகளில் இருக்கும்” என்றார். மகேந்திரன் தனது போர்ஷனின் படப்பிடிப்பை ஓரிரு நாட்களில் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து வருகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் ஆர்யா, முழு கருப்பு நிற உடையணிந்து, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.ஒரு கிராமத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எப்படி கெடுக்க முயற்சிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.
இதில் ஆர்யா முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார். வெந்து தணிந்தது காடு பட நாயகி, சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்.