தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது.
கொரோனா பொது முடக்கத்தின்போது சொந்தமாக ஓடிடி தளத்தை தொடங்கி, அதில் தனது இயக்கத்தில் தயாரான கவர்ச்சி படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் அந்த கவர்ச்சிப் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் ‘லடுகி’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இந்தியாவின் முதல் தற்காப்பு கலை படம் என்று விளம்பரப்படுத்தி உள்ளார். இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ’பெண்’ என்ற பெயரில் தமிழிலும் இந்த படம் ரிலீசாக இருப்பதாகவும் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.