நடிகர் சிம்புவுக்கு தனுஷ் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பொங்கலுக்கு சுசீந்திரன் நடிப்பில் சிம்புவின் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியானது. இதில் ட்ரைய்லர் வெளியான போது ரசிகர்களிடையே படத்தின் சில வசனங்கள் சர்ச்சைக்குள்ளானது.
இதில் ‘நீ அழிக்க வந்த ‘அசுரன்’ன்னா, நான் காக்க வந்த ‘ஈஸ்வரன்’’ என சிம்பு பேசிய வசனங்கள் தனுஷை குறி வைத்து பேசியது என சோஷியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து சிம்பு தரப்பிலும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
READ MORE- ‘மாஸ்டர்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?
இதனையடுத்து, தற்போது தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பயோவில் ‘அசுரன்/ ஆக்டர்’ என மாத்தியுள்ளார். இது சிம்புவுக்கு தனுஷ் கொடுக்கும் பதிலடியா என ரசிகர்களிடையே பேச்சு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.





