உலக அளவில் பார்க்க வேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
199ல் நடந்த சாதி பாகுப்பட்டை மையப்படுத்தியும், ஒரு சமூகம் அதில் இருந்து போராடி வெளியே வருவதை போன்ற காட்சிகளை மையப்படுத்தி, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவானப் திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்.,9ம் தேதி வெளியான இந்தப் படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு, நட்டி, உள்ளிட்டோரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்தப் படத்திற்கு தேசிய அளவில் பாராட்டும், அங்கீகாரமும் கிடைத்தது.
இந்த நிலையில், சர்வதேச நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ்-ல் உலக அளவில் கட்டாயமாக பார்க்க வேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் இடம்பிடித்ததன் மூலம், உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் அந்த செய்தியில் 1990ம் ஆண்டில் நடந்த உண்மைக் கதையை நேர்த்தியாக இயக்குநர் மாரி செல்வராஜ் திரைக்கதையாக கொண்டு வந்திருப்பதாகவும், தமிழ் சூப்பர் ஸ்டார் தனுஷ் மிகுந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி நடித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே ஆங்கில திரைப்படங்களில் தனுஷ் நடித்து வரும் நிலையில், தமிழில் அவர் நடித்த திரைப்படத்தை உலகளவில் கொண்டாடி வருவது அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.