‘புதுப்பேட்டை2’ கண்டிப்பாக வரும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘புதுப்பேட்டை’. விமர்சன ரீதியாக வெளியான போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் பிறகு படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மேலும் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் எனவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில், தனுஷூடன் மீண்டும், ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்2’ ஆகிய படங்களை அறிவித்துள்ளார் செல்வராகவன்.
READ MORE- ‘மாஸ்டர்’ லீக்கான காட்சிகளுக்கு நஷ்ட ஈடு கேட்டுள்ள படக்குழு!
இந்த நிலையில் ‘புதுப்பேட்டை2’ வருமா என்கின்ற கேள்விக்கு அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். ‘’ஆயிரத்தில் ஒருவன்2’ 2024ல் வரும், ‘நானே வருவேன்’ இந்த வருடம் முடிந்து விடும். எனவே, இதற்கிடையில் நிச்சயம் ‘புதுப்பேட்டை2’வை எதிர்ப்பார்க்கலாம்’ என பதிலளித்துள்ளார்.




