சுந்தர்.சியின் ‘அரண்மனை3’ படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமாவில் ஒரு கதைக்களம் ஹிட்டானால் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் வருவது வழக்கம். அதன்படி பேய் கதை களத்தை அடிப்படையாக கொண்டு ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ ஆகிய படங்கள் வந்தது.
அதன்படி, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பில் உள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி போயிருக்க, தற்பொழுது படத்தின் டப்பிங் மற்றும் இதர பணிகள் தொடங்கியுள்ளது.
READ MORE- விஜய்சேதுபதியுடன் இணையும் சத்யராஜ்?
’அரண்மனை3’யில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். தற்போது படத்தில் தனக்கான டப்பிங் முடிந்து விட்டதாக சாக்ஷி அகர்வால் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.




