தல அஜித்குமாரின் ’வலிமை’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். இதில் ஹூமா அஜித்குமாருக்கு தோழியாக தான் வருகிறார் என்று இயக்குனர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ’வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது என்று சமீபத்தில் அறிவித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். இதனைத் தொடர்ந்து தல 61 திரைப்படமும் இவர்கள் மூவரது கூட்டணியிலும் உருவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
விரைவில் வலிமை டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர்.
தல அஜித்குமார் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘வலிமை’ கிளிம்ப்ஸ் தற்போதுவரை யூடியூபில் 10 மில்லியன் பார்வைகள் அதாவது 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக்குகள் பதிவிட்டு சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.




