‘ஸ்வீட்டி’ அனுஷ்காவை நாய் கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் அனுஷ்கா. இவர் நடித்த ’பாகுபலி 2’ திரைப்படம் உலகம் முழுவது மிகப்பெரிய வசூல் சாதனைப் படைத்தது.
‘மொபைலா’ பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அனுஷ்கா, அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்,விஜய்,சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்தார். பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு அவர், பிரபாஸை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. பின் நடிப்பில் இருந்து ஒதுங்கினார். அனுஷ்கா எப்போது மீண்டும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செல்ல நாய் முத்தமிடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், அவரது ரசிகர்கள் ஸ்வீட்டி என குறிப்பிட்டு லவ் சிம்பிள்களை அள்ளி தெறிவிக்கவிட்டு வருகின்றனர்.
-பா.ஈ.பரசுராமன்.




