“வேர் இஸ் த பார்ட்டி… ஆ நம்ப வூட்டுல பார்ட்டி” என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சனா கான். தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிஜாப் அணிவதன் காரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “எனது கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதியில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். கடந்த 2019-ம் ஆண்டு ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் கல்லறை ஒன்றில் நான் இருந்தேன். அந்த கனவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதில், உங்கள் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
மறுநாள் காலையில் நான் எழுந்தபோது எனக்கு பிறந்த நாள். அன்று முதல் ஹிஜாப் அணியத் தொடங்கினேன். இனி இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என்று முடிவெடுத்தேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
-பா.ஈ.பரசுராமன்.