ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட் விவாகரத்தில் நடிகை வித்யா பாலன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரும், தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ரன்வீர், பெண்களின் மனதை புண்படுத்தி விட்டார் என்று கூறி அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நடிகை வித்யா பாலன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒருவர் இப்படி செய்வது இதுவே முதல்முறை. அது நம்முடைய கண்களுக்கு விருந்துதான் என்றார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்த கேள்விக்கு, வேலையில்லாதவர்கள் வீணாக வழக்கு தொடுத்து நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த போட்டோ பிடிக்கவில்லை என்றால் பேப்பரை மூடிவிட்டு செல்லலாம். அல்லது தூக்கி எறிந்து விட்டு செல்லலாம். அது அவர்கள் விருப்பம். ஏன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேள்வியெழுப்பினார்.

முன்னதாக, ஆலியாபட் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிப்பெற்றதை மையமாக வைத்து 83 என்ற படத்தில் ரன்வீர், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் நிர்வாண போட்டோஷூட் விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
-பா.ஈ.பரசுராமன்.




