முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ’விருமன்’. இப்படத்தின் டிரைலரை ஆகஸ்டு 3ம் தேதி இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். டிரைலர் வெளியான இரண்டே நாளில் 58 லட்சம் பார்வைகளை கடந்தது.
படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குநர் முத்தையாவுடன் நடிகர் கார்த்தி ஜோடி சேர்ந்துள்ளார். கிராமத்து கதை என்பதால் இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்டு 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது.




